மகளின் தவறான உறவை கண்டித்த தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிடமனேரி பகுதியை சார்ந்தவர் செல்வம்-சிவகாமி தம்பதியினர். செல்வம் மீன் வியாபாரியாக தொழில் செய்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த நான்கு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். சிவகாமி தனது மூத்த மகளான ஜெயப்பிரியா மற்றும் அவருடைய கணவர் திருப்பதியுடன் கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். செல்வம் கடந்த 30ஆம் தேதி தனது மகளை பார்ப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார்.
அப்போது செல்வம் தன் மகளான ஜெயப்பிரியா அரிஸ்டாட்டில் என்பவருடன் பழக்கம் வைத்திருந்ததாகக் கூறி அவரை கண்டித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதுகுறித்து அரிஸ்டாட்டிலிடம் ஜெயப்பிரியா கூறியபோது அரிஸ்டாட்டில் தனது நண்பர்களான சதீஷ்குமார் மற்றும் சின்னதுரை ஆகியோருடன் செல்வத்தை ஏரியின்கீழூர் ஆற்று பாலத்தில் வழிமறித்து அவரை பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அவர் அந்த இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.
அதன்பின் சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மயக்கம் தெளிந்ததும் தனது உறவினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வதை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கரியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அரிஸ்டாட்டில், சின்னதுரை, சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.