கொலம்பியா நாட்டில் ஒரு மனிதனின் தொண்டையிலிருந்து ஏழு அங்குல நீளம் உள்ள மீனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜனவரி 23 அன்று கொலம்பியாவில் பிவிஜய் நகரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் ஒரு மீன் சிக்கியது. அந்த மீனை எடுத்து கையில் வைத்துள்ளார். மீண்டும் வலையை விரித்த போது இரண்டாவது மீன் சிக்கியது. அதையும் இழக்க விரும்பாததால் அந்த மீனை வாயில் வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக அந்த அவரது தொண்டைக்குள் சென்று அடைத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்ந்து அந்த நபர் தானே நடந்து சென்று மருத்துவமனை அனுமதித்துக் கொண்டு, பின்னர் வாயைத் திறந்து தனது பிரச்சினையை கூற முடியாததால் சைகையின் மூலம் டாக்டரிடம் கூறியுள்ளார்.
பிறகு டாக்டர் விரைவாக ஸ்கேன் செய்து மீனை அகற்றும் பணியை தொடங்கினர் .அந்த வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு மருத்துவர் அந்த மனிதனின் உணவுக் குழாயில் இருந்து மீனை அகற்றுவது அந்த வீடியோவில் வந்திருந்தது. பின்னர் அந்த நபர் இரண்டு நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று எந்தவித காயமும் இல்லாமல் உடல் நலத்துடன் இருக்கிறார்.