ருசியான மீன் வடை செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
மீன் – 500 கிராம்
முட்டை – 1
பச்சைமிளகாய் – 3
உருளைக்கிழங்கு – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மீனை சுத்தம் செய்து , வேக வைத்து முள் மற்றும் தோலை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை மிளகாய் , மிளகாய்த் தூள், உப்பு மற்றும் முட்டை கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன் கலவையிலிருந்து சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால் ருசியான மீன் வடை தயார்!!!