திருப்பூரில் 15 தெருநாய்களை விஷம் வைத்துக் கொன்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
திருப்பூர் கொங்கணகிரி இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு மீன்பிடித் தொழிலை செய்து வருபவர் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதை மீன் வியாபாரிகளிடம் சென்று விற்று வருகிறார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பும் பொழுது வீதியில் இருக்கக்கூடிய தெருநாய்கள் இவரைப் பார்த்து குறைத்துள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த அவர் மீனில் விஷம் தடவி அதை 15 தெருநாய்களுக்கு கொடுத்துள்ளார். இதனை உண்டுவிட்டு 15 தெருநாய்களும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு பரவியதை அடுத்து ப்ளூ காசுக்கு தகவல் சென்றதை அடுத்து காவல் துறையில் அவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கோபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.