மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியில் மகேந்திரன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சகாயம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
இந்நிலையில் மனைவி சென்றதால் மன உளைச்சலில் தெருவில் நின்று புலம்பிக் கொண்டிருந்த மகேந்திரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.