கடல் அட்டைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோடிமுனை பகுதியில் ஜூலியஸ் நாயகம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வரும் ஷாஜன் என்பவரும் இணைந்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜூலியஸ் நாயகம், ஷாஜன் மற்றும் 2 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்கு மீன்பிடித்துக் கொண்டு இருந்ததால் கச்சதீவு கடற்படையினர் இவர்கள் நான்கு பேரையும் சிறைபிடித்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நான்கு நபர்களும் கடல் அட்டைகளை பிடித்து கடத்தி வந்து விற்பனை செய்துள்ளதாகவும், அதனை அறிந்து லட்சத்தீவு கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்த மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாத அவர்களது குடும்பத்தினர் லட்சத் தீவு பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.