Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருக்கும் போது…. சட்டென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள குந்தளிமேடு கிராமத்தில் மோகன் ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பொதியாரங்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் குளத்தில் மோகன் ராவ் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கை அங்கிருந்த மின் மோட்டாரில் பட்டது.

இதனையடுத்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மோகன் ராவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |