Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த விபரீத வேலை… மீனவருக்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் பிடிக்கப் போவதாக கடலில் கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் முருகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அவரைத்தேடி கடலுக்குள் சென்றனர். ஆனால் அவர்களால் முருகனை கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில் மீனவர் முருகனின் உடலானது கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் திடீரென எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |