தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் வசிக்கும் மீனவரான நரோங் பெட்சராஜ், கடலிலிருந்து கரைக்கு திரும்பிய சமயத்தில், நியோம் கடற்கரையில் வித்தியாசமான கட்டி போல இருந்த ஒரு பொருளை பார்த்திருக்கிறார். அதன் பின்பு, அது திமிங்கிலத்தின் வாந்தி என்று அவருக்கு தெரியவந்திருக்கிறது.
எனவே, அவர் அதனை சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதனை அவர்கள் பரிசோதித்தபோது, ஆம்பர்கிரிஸ் என்ற விலை உயர்ந்த பொருள் என்று தெரியவந்திருக்கிறது. இப்பொருள், ஒரு கிலோ 30 ஆயிரம் யூரோக்களுக்கு விற்பனையாகிறது. எனவே, இதனை “கடலின் புதையல்” என்றும் “மிதக்கும் தங்கம்” என்றும் அழைக்கிறார்கள்.
இந்த மீனவரிடம், 30 கிலோ ஆம்பர்கிரிஸ் இருந்துள்ளது. எனவே, அவர் ஒரு மில்லியன் யூரோக்கள் பெறவுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது, எங்களது கிராமத்தில் தற்போது வரை எவரும் திமிங்கலத்தின் வாந்தியில் ஆம்பர்கிரிஸை கண்டதில்லை. நான் அதிக மகிழ்ச்சியில் உள்ளேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல், மீன் பிடிக்கும் தொழிலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியிருக்கிறார்.