Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்….. கடலில் மாயமான சம்பவம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் மீனவரான ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் சுரேஷ் என்பவரது விசைப்படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் படகின் ஓரத்தில் அமர்ந்து இருந்ததால் ஆனந்தராஜ் திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் ஆனந்தராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் கரைக்கு வந்து நடந்த சம்பவத்தை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி காவல்துறையினர்  மாயமான ஆனந்தராஜை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |