பொறுமையின் சிகரமாக திகழும் மீனராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு முக்கியமான பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் உருவாகும். நல்லோரின் ஆலோசனை மாற்று வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீராக தகுந்த அளவில் பணிபுரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். தேவையில்லாமல் செலவு வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பொறுமையாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லுங்கள். வாகனத்தில் செல்லும்போது பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனஸ்தாபம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
சின்ன சின்ன பிரச்சனைகள் இல்லத்தில் வரக்கூடும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இன்று எல்லா விஷயத்தையும் சரிசெய்துவிடலாம். தயவுசெய்து இன்று நீங்கள் வீன் வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்க வேண்டாம். என்னால் முடியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என எதையும் செல்ல வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் தான் முன்னேற முடியும். கவனமாக இருப்பது மிகவும் நல்லது. இன்று மிகவும் முக்கியமான காரங்களுக்கு செல்லும் பொழுது மிகவும் பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையில் சென்றால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்