Categories
தேசிய செய்திகள்

மீனவர்கள் சிறை பிடிக்கப் படுவதில்லை… மூழ்கடிக்கப் படுகிறார்கள்… வைகோ அறிவிப்பு…!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நாம் விடுதலை செய்வதற்கு அவசியம் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசை படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு எல்லை தாண்டி வந்தது என்று கூறி இலங்கைப் படையினர் இரண்டு படகுகளில் வேகமாக வந்து அவர்கள் வந்த படகை சேதப்படுத்தினர்.

சேதமடைந்த படகு கடலுக்குள் மூழ்க தொடங்கியது.அப்போது மீனவர்கள் எழுப்பிய அலறல் சத்தத்தை வாக்கிடாக்கி மூலம் மற்ற படகில் மீன்பிடிக்க சென்றவர்களும் கேட்டுள்ளனர். அனைவரும் கரைக்குத் திரும்பிய வேலையிலும் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியவர்கள் கரை திரும்பாததால் சந்தேகமடைந்த மீனவர்கள் 12 விசைப்படகுகளை எடுத்து கொண்டு கடலில் சென்று தேடி பார்த்தனர்.

ஆனால் இதுவரை மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இலங்கை கடற்படையினர் மீனவர்களை நாங்கள் சிறை பிடிக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,இலங்கையில் சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆனால் இனி மீனவர்களை விடுதலை செய்வதற்கான அவசியம் இல்லை. ஏனென்றால் மீனவர்கள் கைது செய்யப்படவில்லை. கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காணமல் போன மீனவர்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |