Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நிலைகுலைந்த குடும்பம்… இளம் மீனவருக்கு நடந்த விபரீதம்… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

கடலில் தவறி விழுந்த இளம் மீனவரை பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடக்கு புதுக்குடி பகுதியில் தினமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசீகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகில் வசீகரன், தினமணி மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் கடந்த ஜுன் 26 – ஆம் தேதியன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென வசீகரன் கடலில் தவறி விழுந்துவிட்டார். அதன்பிறகு தினமணி மற்றும் மணிகண்டன் இருவரும் வசீகரனை தீவிரமாக நடுகடலில் தேடி வந்துள்ளனர்.

இதனை அடுத்து கடலோர காவல் நிலையத்தில் வசீகரனின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வசீகரனை தனிப்படை அமைத்து 2 நாட்களாக தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 15 படகுகளுடன் மீனவர்கள் வசீகரனை நடுக்கடலில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது நடுக்கடலில் வசீகரனின் உடல் மிதந்துள்ளது. இதனைப் பார்த்த மீனவர்கள் வசீகரனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசீகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு வசீகரனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்துள்ளனர்.

Categories

Tech |