கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் விசை படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் இருக்கின்றது. இவர்கள் மீன்வளத்துறை விதிமுறைகளை பின்பற்றி அதிகாலை கடலுக்கு சென்று இரவு 9:00 மணிக்கு கரைக்கு திரும்புவார்கள். மேலும் மீன் பிடித்து வரக்கூடிய மீன்களை உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை மீன்பிடி துறைமுகத்தில் நேரடியாக இரவு நடைபெறும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வார்கள்.
இந்த நிலையில் சென்ற சில நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கொண்டுவரும் மீன்களை வியாபாரிகள் குறைந்த விலைக்கு எடுத்துச் சென்று வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சொல்லப்படுகின்றது. ஆகையால் அதிக செலவு செய்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்களின் மீன்களை வியாபாரிகள் விலை குறைவாக ஏலத்தில் எடுப்பதால் மீனவர்களுக்கு அதிகம் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கின்றது. இதன் காரணமாக மீனவர்கள் நேற்று மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகளை கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்தார்கள்.