Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. இது என்னது…? இவ்ளோ பெருசா இருக்கு… வலையில் சிக்கியதை கடலில் விட்ட மீனவர்கள்…!!!

மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலையில் அரிய வகையான கடல்பசு மாட்டிய நிலையில், அதனை மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டிருக்கிறார்கள்.

கடலில் மாசு அதிகரித்ததால் கடலுக்கு அடியில் வளரக்கூடிய புற்கள் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் அவற்றை உண்டு வாழக்கூடிய கடல் பசுக்களும் விரைவாக அழிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மன்னார் வளைகுடாவில் சுமார் 200-க்கும் குறைந்த கடல் பசுக்கள் தான் இருக்கிறது.

எனவே அவை வாழக்கூடிய இடங்களில் கடல் புற்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், வனத்துறை கடல் பசுக்களை பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில், மீனவர்கள் வலை விரித்த போது அதில் கடல்பசு மாட்டிக்கொண்டது. எனவே வலையை அறுத்த மீனவர்கள், கடல் பசுவை மீட்டு கடலில் விட்டுவிட்டார்கள்.

Categories

Tech |