வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்காக எச்சரிக்கை பொறுத்தவரை, குமரி கடல், மன்னார் வளைகுடா தமிழக கடற்கரை பகுதி, தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.