Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு கேரள கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது.

இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது.சுமார் 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் புயல் கரையை கடந்தாலும் தென்மேற்கு திசையிலிருந்து காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசுவதால் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிமை மையம் தகவல் அளித்துள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் கேரள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை இருக்கும் என்பதால் மேற்கூறிய பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தகவல் அளித்துள்ளனர். மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |