Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு கரார்… இனிமேல் விசாரணை இன்றி தண்டனை…!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒரு நிகழ்வாக தொடர்கிறது. அதனுடன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல் அதிகரித்துள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்களை தாக்கும் இலங்கை அரசின் செயல்பாடுகளை கண்டிக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 26 மீனவர்களை விடுவிக்கக் கோரி பலரும் கண்டனங்களை எழுப்பினர். தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரையும் இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் இனிமேல் விசாரணை இன்றி மீனவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தாங்கள் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமை ஆக்கி விட்டோம் என அறிவித்துள்ளது.

Categories

Tech |