Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடல் சீற்றம்” மணிக்கு 50கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… பாதியிலையே கரைக்கு திரும்பிய மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

தமிழக கடலோரப் பகுதிகளில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் குளைச்சல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 

Image result for கடல் சீற்றம்

இதையடுத்து சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காலையில் மீன்பிடிக்க சென்ற ஒரு சில மீனவர்களும் கடல் சீற்றத்தால் பாதியிலேயே திரும்பியுள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள்  மற்றும் விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |