பிரான்சில் மீனவர்கள் வீசிய வலையில் ஒரு நபரின் உடல் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பா து கலே என்ற கடற்பகுதியில் மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார்கள். அந்த சமயத்தில், அவர்களின் வலையில் அதிக எடை கொண்ட மீன் மாட்டியதாக கருதி வலையை வெளியில் இழுத்திருக்கிறார்கள். அப்போது, அவர்கள் வலையில் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ந்துபோனார்கள்.
அதன்பின்பு, அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளார்கள். அது ஒரு ஆணின் உடல் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால், இறந்த நபர் தொடர்பான தகவல்கள் தற்போது வரை தெரியவில்லை. எனவே, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.