சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள்,
தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய காரணத்தினால், 10 முதல் 12ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி மற்றும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே இது 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் 10ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைக்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.