Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், பெரம்பலூர், மதுரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்,

ஆந்திராவை ஒட்டிய மேற்கு வங்கக்கடல், ஒடிஸாவை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 40 -50 கி. மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |