ராமநாதபுரம் மாவட்டத்தில் காவலர் தேர்வில் தேர்வான நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த 2ஆம் நிலை காவலர், சிறை காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் போன்றவை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் எழுத்து தேர்வில் தேர்வான தேர்வாகி அழைப்பு கடிதம் அனுப்பட்ட 501 நபர்களில் இருந்து 398 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கான நடைபெற்ற 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 19 பேர் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து உயரம் மற்றும் மார்பளவு போன்ற தேர்வில் 65 பேர் தேர்வாகியுள்ளது. இதேபோல் அனைத்து தேர்வுகளிலும் 314 பேர் தகுதிபெற்ற நிலையில் இவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரமந்தபுரம் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.