ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கட்டாலங்குளம் என்ற கிராமத்தில் 5 சிறுமிகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதில் ஒரு சிறுமியின் தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள் 5 பேரும் எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்தனர்.
அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இதனை கண்ட பெற்றோர்கள், சிறுமிகள் அனைவரையும் மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தனர்.. அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிறுமிகளின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.