Categories
Uncategorized மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு : சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!!

சாத்தான்குளம் வழக்கில் சிறையிலிருக்கும் 5 காவல்துறையினரை நாளை நேரில் ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து  கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது சிபிஐ வழக்கை விசாரணைக்கு ஏற்று நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிபிசிஐடி முதலில் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது.

சிபிஐ அதிகாரிகள் விஜயகுமார் சுக்லா ஏடிஎஸ்பி தலைமையில் 3 அதிகாரிகள் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.. இந்நிலையில் மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி ஹேமானந்த் குமார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 5 பேரையும் நாளை காலை 11 மணிக்கு நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |