மத்திய பிரதேச மாநிலத்தில் 24 வயதான ஒரு இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஐந்து வயதுச் சிறுவனை தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள சிங்க்ராலி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றத்திற்கு பிறகு அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடி சிங் கோண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள சுகர் பாரி கிராமத்தில் வசிப்பவர் ஆவார். கடந்த 25 ஆம் தேதி அன்று அவருக்கும் அவரது கணவர் புஷ்பராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு புஷ்பராஜ் மனைவி மற்றும் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு பெற்றோருடன் சேர்ந்து விவசாயத்திற்காக வயலுக்கு சென்று விட்டார். இதையடுத்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த அந்தப் பெண் குழந்தையை துணியில் போத்தி எரித்துள்ளார். குழந்தை எரிய தொடங்கியது. வீட்டிலிருந்து தீப்பிழம்புகள் வெளியில் வருவதை கண்ட கிராமவாசிகள் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு தகவல் அனுப்பினார்.
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தை செல்லும் வழியிலேயே இறந்து விட்டது. உள்ளூர்வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் அனுப்பினர். அடுத்தநாள் காவல்துறையினர் குடியை கைது செய்து சிறையில் அடைத்தன.ர் மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவ்வாறு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.