வடகிழக்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள (Strasbourg) ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் தீயை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.