Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சாமி கும்பிட சென்றபோது” காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து… 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி..!!!

திருவண்ணாமலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பெங்களூரில் இருந்து ஒரு குடும்பத்தினர் மேல்மருவத்தூருக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். கார் திருவண்ணாமலை அருகில் உள்ள ஓட்டக்குடிசல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது கார் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related image

இதில் காயமடைந்த லாரி ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |