Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா : “4 வயது குழந்தை”… 88 வயது மூதாட்டி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் டிஸ்சார்ஜ்!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2,084 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,823 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலையில், 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இதில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த 5 பேர் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் நாகர்கோவில் அருகே இருக்கும் வெள்ளாடிச்சிவிளைப் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி, 4 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 5 பேருக்கும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பழங்கள் கொடுத்து கைதட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

மேலும் வீடு திரும்பிய அந்த 5 பேரும் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தனிமைபடுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 16 பேரில் 10 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது குமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் 6 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Categories

Tech |