காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.
4 Indian Army personnel incl the Commanding Officer, Major of 21 Rashtriya Rifles unit along with 2 soldiers &one Jammu and Kashmir Police jawan lost their lives in an encounter in Handwara in Jammu and Kashmir. Two terrorists also killed in the encounter: Indian Army officials pic.twitter.com/nmUCtrN88X
— ANI (@ANI) May 3, 2020
ராணுவ வீரர்களை பார்த்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இந்த சண்டையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டை – 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம்!வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் துப்பாக்கி சண்டையில் வீர மரணமடைந்தனர்.
ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல் குவாஸி உள்ளிட்ட 5 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.