அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சமீபத்தில் விமானத்தின் மூலம் நிகழும் விபத்துகள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் 7 நாள் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் அலாஸ்கா பகுதியிலுள்ள கெட்சிகன் என்ற இடத்தை மிதக்கும் விமானம் மூலம் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அதே நேரத்தில் 4 பேர் கொண்ட மற்றொரு சுற்றுலாக் குழுவினர் வேறொரு மிதக்கும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 மிதக்கும் விமானங்களும் நடுவானில் வைத்து மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை. காணாமல் போன நபரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.