Categories
உலக செய்திகள்

பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட…. ஒருவாரத்தில்…. செவிலியருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!

தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவில் இருந்தே உலகம் என்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் கடந்த 14ம் தேதி அன்று பைசர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை வெளியிட்ட அவர் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தடுப்பூசி போட்ட ஒரே வாரத்தில் அவருக்கு மீண்டும் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து டாக்டர் கிறிஸ்டியன் ரமர்ஸ் கூறுகையில்,”தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உடலில் கொரோனாவுக்கான ஆண்டிபாடிகள் உருவாக்க 10 முதல் 14 நாட்கள் வரை ஆகும். எனவே ஒவ்வொரு நபரும் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |