திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்திற்கு ராணுவவீரர்கள் வருகை தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் மற்றும் ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் துணை ராணுவ படையினர் நேற்று கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர்.
இந்த அணிவகுப்பு கணக்கன்பட்டி பகுதியில் துவங்கி பழைய ஆயக்குடி, பச்சநாயக்கன்பட்டி, புது ஆயக்குடி வழியே சென்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து மாலையில் பாதவிநாயகர் கோவில் பகுதியில் துவங்கி பேருந்து நிலையம், புதுதாராபுரம், மார்க்கெட் ரோடு வழியாக சென்று தேரடி பகுதியில் கொடி அணிவகுப்பு நிறைவு பெற்றுள்ளது.