Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlahNews: அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு – பெரும் பரபரப்பு …!!

அதிமுகவில்  ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான CV.சண்முகம் தெரிவித்தார்.  இந்நிலையில் தலைமை இல்லாமல் செயல்படக்கூடிய கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தான் வழி நடத்துவோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படவும். பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்-ஸை நீக்கி விட்டு வேறொருவருக்கு பொறுப்பு வழங்கப்படும் முடிவு எடுக்கப்படும் என தெரிகின்றது. இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் அது தன்னை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்று ஓபிஎஸ் நேற்று தெரிவித்திருந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது இபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது.

இந்த கூட்டத்தில் வரும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானம் உள்ளிட்ட பல ஆலோசனைகள் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக தலைமையகத்தில் உள்ள ஓபிஎஸ் பேனர்களை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கிழித்து ஓபிஎஸ்_ஸுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |