மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் இபிஎஸ் ஏற்றி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது கம்பம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்துள்ளார்.
Categories