Categories
மாநில செய்திகள்

FLASH: இதற்கு காரணம் செல்போன்களில் வரும் ஆபாச படங்களே….. ஐகோர்ட் கருத்து…!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 18 வயதுடைய எனது மகன் மீது பாலியல் சட்டப்படி வழக்குபதிவு செய்து பிடித்து வைத்துள்ளனர். அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதிகள், “மனுதாரர் மகன் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. வேறு எந்த வழக்கும் இல்லாதபட்சத்தில் அவரை விடுவிக்கலாம். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இளைஞர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேரும், 18 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள்.

தற்போது இவர்கள் பாலியல் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். இதற்கு செல்போன்களே காரணம். ஹார்மோன் மாற்றங்களினால் செல்போன்களில் வரும் ஆபாச படங்களை இளைஞர்கள் பார்த்து, மனக்குழப்பத்திற்கு ஆளாகி, தவறான வழியில் திசைதிருப்பி விடப்படுகிறார்கள். குற்றச்சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கி, தவறான சிந்தனையை போக்கி, இயல்பு வாழ்க்கையை வாழச்செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Categories

Tech |