உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்யப் படைகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்புடைய செயற்கைக்கோள் புகைப்படத்தை மாஸ்டர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்துள்ளது.
உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 15 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்ய படைகளின் இராணுவ வாகனங்கள் உக்ரைன் தலைநகர் கீவிற்கு அருகில் 64 கிலோமீட்டர் நீளத்திற்கு அணிவகுத்து நிற்பது தொடர்புடைய செயற்கைக்கோள் புகைப்படத்தை மாஸ்டர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்துள்ளது.