பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கில் சிறை சென்றவர் தீனதயாளன். கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைகளை கடத்திய கும்பலில் முக்கியமானவர். சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளியாகவும் தீனதயாளன் திகழ்ந்தவர் ஆவார்.
Categories