Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தை தாக்க வரும் புயல்…. கனமழை தொடரும்….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி 48 மணிநேரத்தில் வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தில் கனமழை தொடரும். மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. தெரிவித்துள்ளது.

Categories

Tech |