Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

FLASH: திடீரென தடம் புரண்ட ரயில்…. பெரும் பரபரப்பு…!!!!

திருச்சி கிராப்பட்டி யார்டில் இருந்து, ரயில் நிலையம் அருகே வந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தடம் புரண்ட‌து. இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளாயினர்.

Categories

Tech |