சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர்.
இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் நடைபெற்றது. கட்டுப்பாடுகளுக்கு இடையே திரை பிரபலங்கள் பங்கேற்க திருமணம் நடந்துமுடிந்தது. புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் ட்விட்டரில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை விக்கி பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கல்யாணத்தில் தாலியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக் கொடுக்க, விக்னேஷ் சிவன் கண்களில் நீர் ததும்ப நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார்.