Categories
உலக செய்திகள்

FLASH: “நான் பதவி விலகுகிறேன்”…. “பிரதமருக்கு தான்” இங்க அதிகாரமிருக்கு…. அதிரடி கொடுத்த அதிபர்…. அரண்டு போன மக்கள்….!!

அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்ட சர்கிஸ்சியன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து அந்நாட்டின் அதிபரான சர்கிஸ்சியன் விலக்கப்பட்டுள்ளார். இதனால் அர்மீனியாவின் அதிபரான சர்கிஸ்சியனுக்கும், அந்நாட்டின் பிரதமரான நிகோல் என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்கிஸ்சியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தான் அர்மீனியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, அர்மீனியாவின் ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் அமைப்பில் தனக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அர்மீனியாவில் அதிபரை விட பிரதமர் பதவிக்கே அதிக அதிகாரம் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |