Categories
தேசிய செய்திகள்

FLASH: பேருந்தை மறித்து துணிகர கொள்ளை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநில ஆழ்வார் மற்றும் பிலாஸ்பூர் நகருக்கு அருகில் கே.எம்.பி. எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்ஸின் பின் தொடர்ந்து வந்த கார் பேருந்து முன்பு நின்றது. அதன் பிறகு அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேரைக் கொண்ட கும்பல் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதனை தொடர்ந்து பஸ்ஸுக்குள் நுழைந்த கும்பல் பயணிகளை மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றனர். இதனை தட்டி கேட்ட பஸ் கண்டக்டர் மற்றும் பயணிகளை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர்.

அதன்பிறகு அந்த கும்பல் கண்டக்டரின் பணப்பையை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில் அவர்களின் 2 பேரை பயணிகள் மடக்கிப் பிடித்தனர். ஆனால் மற்ற 4 பேர் கண்டக்டரின் பணபையுடன் காரில் ஏறி தப்பிச் சென்றனர். அந்த பையில் ரூ.27,000 இருந்ததாக காயம் அடைந்த கண்டக்டர் தெரிவித்துள்ளார். இந்த வழிப்பறி குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பயணிகள் பிடித்து வைத்திருந்த 2 வழிப்பறிகளை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தப்பிச்சென்ற கூட்டாளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |