Categories
அரசியல்

FLASH: பொதுக்குழுவில் பங்கேற்கிறார் OPS….. கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி கூட்டலாம் என்றும் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதில் 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Categories

Tech |