உக்ரைன் விவகாரத்தால் போர் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ரஷ்யாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி இரத்து செய்துள்ளது.
ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கிரீமியா தொடர்பாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து நோட்டாவின் உறுப்பினராக சேர விரும்பும் உக்ரைனுக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டாவில் உக்ரேன் சேர்ந்தால் தங்களால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போய்விடும் என்று ரஷ்யா அஞ்சியுள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரேன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தங்களது ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் கிழக்கு உக்ரைனிலுள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளில் மோதலை தூண்டி விட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மற்றும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரித்து விட்டு தங்களது படைகளை அங்கு ரஷ்யா குவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளார். அதன்படி ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவை சேர்ந்த 27 தனிநபர்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் மீது பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கிடையே ஜெர்மனி ரஷ்யாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்திற்கு வழங்க ஒப்புதலை ரத்து செய்துள்ளது.