Categories
மாநில செய்திகள்

FLASH: 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…. மழை நீடிக்கும்…!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Categories

Tech |