Categories
மாநில செய்திகள்

FLASH: நாடு முழுவதும் மீண்டும் – அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது கொரோனவில்  இருந்து உருமாறிய புதிய வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய வைரஸுக்கான 7 அறிகுறிகள் குறித்து தற்போது சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 6,000 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இந்தியா வந்தவர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |