நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வந்தனர். இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
இதனையடுத்து தற்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பல மாநிலங்களிலும் நடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அசானி புயல் காரணமாக ஆந்திராவில் இன்று நடக்க இருந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ தேர்வு மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.