அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாகி உள்ள நிலையில் கட்சியை இபிஎஸ் சட்டவிரோதமாக கைப்பற்ற முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகம் சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓபிஎஸ் ஈடுபடாத நிலையில்,அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை அளிப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உட்கட்சிப் பூசலும் மத்தியில் ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேற அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியாக அதிமுக பொதுக்குழு கூட்டம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Categories