Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்… திடீர் அறிவிப்பு… பரபரப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமக கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமக கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் ஐஜேகே மற்றும் சமக கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் எங்கள் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் ஏற்கத் தயார் என ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |